நைஜீரியாவின் வடக்கு பகுதியில், பயணிகளை ஏற்றி சென்றுக் கொண்டிருந்த படகு நைஜர் ஆற்றில் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கோகி மாநிலத்தில் இருந்து நைஜர் மாநிலத்தை நோக்கி சென்ற அந்த படகில் 200-க்கும் மேற்பட்டோர் பயணித்தனர். படகு கவிழ்ந்ததும் பயணிகள் ஆற்றில் விழுந்து தத்தளித்தனர். நீச்சல் தெரிந்தவர்கள் கரை சேர்ந்தனர். உள்ளூரைச் சேர்ந்த டைவிங் குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.மேலும் அவசரகால மேலாண்மை குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து உதவினர். மீட்பு பணியின்போது 8 சடலங்கள் மீட்கப்பட்டன. 100 […]

நைஜீரியாவின் வடக்கு பகுதியில், பயணிகளை ஏற்றி சென்றுக் கொண்டிருந்த படகு நைஜர் ஆற்றில் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

கோகி மாநிலத்தில் இருந்து நைஜர் மாநிலத்தை நோக்கி சென்ற அந்த படகில் 200-க்கும் மேற்பட்டோர் பயணித்தனர். படகு கவிழ்ந்ததும் பயணிகள் ஆற்றில் விழுந்து தத்தளித்தனர். நீச்சல் தெரிந்தவர்கள் கரை சேர்ந்தனர். உள்ளூரைச் சேர்ந்த டைவிங் குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.மேலும் அவசரகால மேலாண்மை குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து உதவினர். மீட்பு பணியின்போது 8 சடலங்கள் மீட்கப்பட்டன. 100 பேரின் நிலை பற்றிய தகவல் தெரியவில்லை. பெரும்பாலும் பெண்கள் உள்ளனர். இதில் ஏராளமானோர் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்த படகு மூழ்கியதன் காரணம் அதிக பயணிகளை ஏற்றியதால் என கருதப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu