ஆப்பிரிக்காவில் உள்ள காங்கோ நாட்டில், கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக, தலைநகர் கின்ஷாசாவில் மழையால் அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இங்கு பெய்த மழை காரணமாக, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதில் சிக்கி இதுவரை 100 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்நிலையில், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது.
காங்கோவில் உள்ள கலிமா பகுதியில் மட்டும் 35 க்கும் மேற்பட்டவர்கள் உயிர் இழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அப்பகுதி மேயர், உயிரிழப்புகள் குறித்த தகவல்களை வெளியிட்டார். வெள்ளத்தில், மேலும் பலர் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே, சடலங்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. காங்கோ நாட்டின் பிரதமர் ஜான் மிஷல் சமா ளுகோண்டே, மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருவதாக தெரிவித்துள்ளார்.