நைஜீரியா அருகே பிரார்த்தனை கூட்டத்தில் 15 பேர் சுட்டுக்கொலை

February 26, 2024

நைஜீரியா அருகே தேவாலய பிரார்த்தனை கூட்டத்தில் 15 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று பர்கினோ பசோ. இந்த நாடு நைஜீரியா மற்றும் மாலி போன்ற நாடுகளை எல்லையில் கொண்டுள்ளது. இந்நாட்டில் கடந்த செப்டம்பர் மாதம் ராணுவம் ஆட்சியை பிடித்தது. அந்நாட்டில் ஐ.எஸ், அல்கொய்தா போன்ற பயங்கரவாத அமைப்புகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இதனால் அவ்வப்போது பயங்கரவாத குழுக்கள் பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. இதன் காரணமாக பாதுகாப்பு […]

நைஜீரியா அருகே தேவாலய பிரார்த்தனை கூட்டத்தில் 15 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று பர்கினோ பசோ. இந்த நாடு நைஜீரியா மற்றும் மாலி போன்ற நாடுகளை எல்லையில் கொண்டுள்ளது. இந்நாட்டில் கடந்த செப்டம்பர் மாதம் ராணுவம் ஆட்சியை பிடித்தது. அந்நாட்டில் ஐ.எஸ், அல்கொய்தா போன்ற பயங்கரவாத அமைப்புகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இதனால் அவ்வப்போது பயங்கரவாத குழுக்கள் பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. இதன் காரணமாக பாதுகாப்பு படையினர் இவர்களை ஒழிக்க நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். அரசு ஆதரவு குழுக்களும் பாதுகாப்பு படையினருக்கு ஆதரவாக அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

இந்நிலையில், அந்நாட்டில் ஷகீல் மாகாணத்தில் எசாஹ்னி என்ற பகுதியில் நேற்று ஒரு கத்தோலிக்க தேவாலயத்தில் பிரார்த்தனை நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். அப்போது துப்பாக்கி ஏந்திய கும்பல் ஒன்று திடீரென்று தேவாலயத்திற்குள் நுழைந்தது. அவர்கள் பிரார்த்தனை செய்த பக்தர்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டனர். இந்த தாக்குதலில் 15 பேர் பலியாகினர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu