சீன வணிக வளாகத்தில் தீ விபத்து - 16 பேர் பலி

July 19, 2024

சீனாவில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் பலியாகினர். சீனாவில் சிச்சுவான் மாகாணத்தில் ஜிகோங் என்னும் நகரில் 14 மாடி கட்டிடம் ஒன்றில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் நேற்று மாலை 6 மணி அளவில் நடந்தது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மீட்பு குழுவினர் விரைந்தனர். அப்போது அவர்கள் கட்டிடத்தில் சிக்கி இருந்த 75 பேரை மீட்டதாக கூறினர். இந்த விபத்தில் 16 பேர் […]

சீனாவில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் பலியாகினர்.

சீனாவில் சிச்சுவான் மாகாணத்தில் ஜிகோங் என்னும் நகரில் 14 மாடி கட்டிடம் ஒன்றில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் நேற்று மாலை 6 மணி அளவில் நடந்தது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மீட்பு குழுவினர் விரைந்தனர். அப்போது அவர்கள் கட்டிடத்தில் சிக்கி இருந்த 75 பேரை மீட்டதாக கூறினர். இந்த விபத்தில் 16 பேர் பலியாகி உள்ளனர். மற்றவர்கள் கட்டிடத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர். பணியின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த சீனாவின் தீயணைப்பு அமைச்சகம் பணிக்குழுவை அனுப்பியுள்ளது.

சீனாவில் கடந்த சில காலமாக கட்டிடங்களில் தீ விபத்து ஏற்படுகிறது. இது போன்ற பொது இடங்களில் தீ விபத்துகளுக்கு காரணம் மின்சாரம் மற்றும் எரிவாய்க் குழாய்கள் பழுதடைவது தான் என்று அதிகாரிகள் கூறி வருகின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu