ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலில் நடத்திய தாக்குதலில் இதுவரை 22 அமெரிக்கர்கள் பலியாகினர் என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஐந்து நாட்களாக இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பு இடையே போர் நடைபெற்று வருகிறது. இதில் 3000-க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். இந்நிலையில், ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 22 அமெரிக்கர்கள் பலியானதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,இதுவரை 22 அமெரிக்கர்கள் பலியாகினர். 17 பேர் மாயமாகியுள்ளனர். வரும் நாட்களில் இந்த பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அமெரிக்கர்கள் பலரை ஹமாஸ் அமைப்பினர் பிணைய கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர் என்று தெரிவித்தார்.மேலும், அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சகம் அமெரிக்கர்கள் இஸ்ரேல் பயண முடிவை மறு மதிப்பீடு செய்ய வேண்டும் என்றும் காஸாவுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.