துருக்கி விண்வெளி மையத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் காரணமாக 4 பேர் பலியாகினர்.
துருக்கி தலைநகர் அங்காராவில் உள்ள விண்வெளி ஆய்வு மையத்தின் தலைமையகத்தில் விஞ்ஞானிகள் பலர் பணியாற்றி வருகின்றனர். கடந்த நாளில், இந்த ஆய்வு மையத்திற்குள் ஆயுதங்களுடன் இரண்டு பயங்கரவாதிகள் புகுந்தனர். அங்கு பணியாற்றிய ஊழியர்களை குறிவைத்து அவர்கள் தாக்குதல் நடத்தினர். இந்த பயங்கரவாத நடவடிக்கையில் 4 பேர் உயிரிழந்த நிலையில், 14 பேர் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த பாதுகாப்பு படையினர், தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை தாக்கி வீழ்த்தினர். படுகாயமடைந்தவர்களை மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அங்கு உள்ள பாதுகாப்பு முறைகள் குறித்து மீண்டும் மதிப்பீடு செய்யப்படுகிறது.














