இந்தியாவைச் சேர்ந்த மின்சார வாகன நிறுவனமான ஏதர் எனர்ஜி, தனது இருசக்கர வாகனங்களுக்கான புதிய மென்பொருள் மேம்படுத்துதலை வெளியிட்டுள்ளது.
AtherStack 5.0 என்ற பெயரில் புதிய மென்பொருள் மேம்படுத்துதல் வெளியிடப்பட்டுள்ளதாக, சனிக்கிழமையன்று அறிவிப்பு வெளிவந்துள்ளது. இதன் மூலம், புதிய பயனாளர் தளம் வெளியிடப்பட்டுள்ளது. இது கூகுள் நிறுவனத்தின் வெக்டார் மேப்ஸ் -ஐ தவிர்த்து, கூடுதலாக செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இது ஏதர் 450 எக்ஸ் -கான புதிய மென்பொருள் மேம்படுத்துதலாக வெளிவந்துள்ளது.
இதுகுறித்து பேசிய ஏதர் எனர்ஜியின் இணை நிறுவனர் தருண் மேத்தா, “கடந்த 2018 ஆம் ஆண்டு, இரு சக்கர வாகனங்களுக்கான முதல் மென்பொருள் இயங்குதளத்தை நாங்கள் அறிமுகம் செய்தோம். தற்போது, வெளிவந்துள்ள புதிய மென்பொருள் மேம்படுத்தல் மூலம், தொடுதிரையில் மேப்ஸ் உள்ளிட்ட அம்சங்களை பயனாளர்கள் பயன்படுத்த முடியும்” என்று கூறினார்.