பாரிஸில் நடைபெற உள்ள ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்கு ரஷ்யா மற்றும் பெலாரஸ் வீரர்களுக்கு ஒலிம்பிக் கமிட்டி அழைப்பு விடுத்துள்ளது.
ஜூலை 26 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை 33 வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற உள்ளது. இந்நிலையில் ரஷ்யாவை ஒலிம்பிக் போட்டியில் சேர்ப்பதற்கு பல்வேறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதற்கிடையே சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாடுகளைச் சேர்ந்த வீரர் வீராங்கனைகளை பங்கேற்க வைக்கும் திட்டத்தை முன்னெடுத்துள்ளது. அதன்படி ரஷ்ய வீரர்களான ரஷிய வீரர்கள் மெத்வதேவ், ரூப்லெவ், கச்சனாவ், ரோமன் சபியுல், வீராங்கனைகள் டேரியா கசட்கினா, சாம்சனோவா, அலெக்சாண்ட்ரோவா, மிரா ஆன்ரிவா ஆகியோருக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதேபோல் பெலாரஸ் அரினா சபலென்கா மற்றும் விக்டோரியா அசரென்கா ஆகியோருக்கும் அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து சர்வதேச ஒலிம்பிக் அமைப்பினர் கூறுகையில் பொதுவான கொடியின் கீழ் பங்கேற்க ரஷ்ய மற்றும் பெலாரஸ் வீரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.














