மென்பொருள் துறையில், தொடர்ச்சியாக பணிநீக்கங்கள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், அட்லஸ்யன் கார்ப்பரேஷன் நிறுவனம் இந்த வரிசையில் புதிதாக இணைந்துள்ளது. இது, கிளவுட் கம்ப்யூட்டிங் உள்ளிட்ட பல்வேறு மென்பொருள் சேவைகளை வழங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில், கிட்டத்தட்ட 500 பேர் வரை பணிநீக்கம் செய்யப்படலாம் என்று தகவல் வெளிவந்துள்ளது. இது நிறுவனத்தின் மொத்த பணியாளர் எண்ணிக்கையில் 5% என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக அட்லஸ்யன் நிறுவனத்தின் இணை தலைமை செயல் அதிகாரிகளான மைக் கனான் புரூக்ஸ் மற்றும் ஸ்காட் பர்க்கார், “நிறுவனத்தின் முன்னேற்றத்திற்காக பல மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது” என்று ஊழியர்களுக்கு அனுப்பிய செய்தியில் கூறியுள்ளனர். மேலும், இந்த மறுசீரமைப்பு நடவடிக்கை 70 முதல் 75 மில்லியன் டாலர் மதிப்பில் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.