கொள்ளையை தடுக்க காவல் நிலையத்துடன் ஏடிஎம் அலாரம் இணைக்க வேண்டும் : டிஜிபி சைலேந்திர பாபு 

February 14, 2023

வங்கி ஏடிஎம் கொள்ளையை தடுக்க அருகில் உள்ள காவல் நிலையத்துடன் ஏடிஎம் அலாரத்தை இணைக்க வேண்டும் என்று வங்கி அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திர பாபு அறிவுறுத்தினார். திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏடிஎம்களை உடைத்து பணத்தைக் கொள்ளையடித்தவர்களைப் பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. இதையடுத்து, தமிழகத்தில் உள்ள பல்வேறு வங்கிகளின் பிரதிநிதிகளுடன் டிஜிபி சைலேந்திர பாபு நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது வங்கி அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கிய டிஜிபி, அவற்றை உடனடியாக செயல்படுத்துமாறு அறிவுறுத்தினார். […]

வங்கி ஏடிஎம் கொள்ளையை தடுக்க அருகில் உள்ள காவல் நிலையத்துடன் ஏடிஎம் அலாரத்தை இணைக்க வேண்டும் என்று வங்கி அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திர பாபு அறிவுறுத்தினார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏடிஎம்களை உடைத்து பணத்தைக் கொள்ளையடித்தவர்களைப் பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. இதையடுத்து, தமிழகத்தில் உள்ள பல்வேறு வங்கிகளின் பிரதிநிதிகளுடன் டிஜிபி சைலேந்திர பாபு நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது வங்கி அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கிய டிஜிபி, அவற்றை உடனடியாக செயல்படுத்துமாறு அறிவுறுத்தினார்.

முகத்தை அடையாளம் காண உதவும் மென்பொருள் அடங்கிய கேமராக்களை அனைத்து ஏடிஎம்களிலும் பொருத்த வேண்டும். ஏடிஎம்கள் உடைக்கப்படும்போது எச்சரிக்கை மணி வங்கியில் மட்டுமின்றி, அருகில் உள்ள காவல் நிலையங்களில் ஒலிக்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும். கொள்ளையர்களின் முகம் தெளிவாகத் தெரியும் வகையில் ஏடிஎம் மையங்களில் அதிநவீன கண்காணிப்புக் கேமராக்களை பொருத்த வேண்டும். மேலும், ரகசியக் கேமராக்களையும் பொருத்த வேண்டும் என்று டிஜிபி கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu