சம்பல் மாவட்டத்தில் ஷாஹி ஜமா மசூதியில் ஆய்வு செய்த போலீசார் மீது தாக்குதல்.
உத்தரபிரதேசம் சம்பல் மாவட்டத்தில் 'ஷாஹி ஜமா' மசூதியை ஆய்வு செய்ய வந்த போலீசாரைப் பொது மக்கள் கல் வீசி தாக்கினார்கள். இதனால் கடும் மோதல் ஏற்பட்டது.இந்த மோதலில் மூன்று பேர் உயிரிழந்தனர் மற்றும் 30 க்கும் அதிகமான காவல் துறையினர் காயமுற்றனர். ஆய்வு குழுவினர் மசூதியை ஆய்வு செய்த பின்னர், பொது மக்கள் மீது கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசும் மூலம் நிலைமையை கட்டுப்படுத்தினர்.
இந்நிலையில், சம்பல் மாவட்டத்தில் இணைய சேவைகள் 24 மணி நேரம் தடை செய்யப்பட்டுள்ளன. மேலும், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டது.














