சென்னையில், ரயில் போக்குவரத்தை மேம்படுத்த புதிய திட்டம் கொண்டுவரப்பட உள்ளது. அதன்படி, மத்திய பட்ஜெட்டில் அறிவித்திருந்தபடி, 96.7 கோடி மதிப்பில், சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே நான்காவது ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் துவங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, சென்னை கடற்கரை முதல் சேப்பாக்கம் வரை செல்லும் அனைத்து மின்சார ரயில்களும் ரத்து செய்யப்பட உள்ளன. வரும் ஜூலை 1ம் தேதி முதல் 2024 ஜனவரி 31ஆம் தேதி வரை, இந்த வழித்தடத்தில் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதே வேளையில், வேளச்சேரியிலிருந்து சேப்பாக்கம் வரை, மின்சார ரயில் சேவைகள் வழக்கம் போல தொடரப்படும் என சொல்லப்பட்டுள்ளது.