பிரதமர் மோடிக்கு வந்த பரிசுப் பொருள் ஏலம்; 12-ம் தேதி வரை நீட்டிப்பு

October 3, 2022

பிரதமர் மோடிக்கு வந்த பரிசுப் பொருள்களை ஏலம் எடுப்பதற்கு அக்டோபர் 12ஆம் தேதி வரை நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி பங்கேற்கும் அரசு மற்றும் அரசியல் நிகழ்ச்சிகள், மாநாடுகளில் அவருக்கு பல்வேறு வகையான பரிசு பொருட்கள் வழங்கப்படுகின்றது. இதேபோல் வெளிநாடுகளுக்கு செல்லும்போதும் பிரதமருக்கு பல்வேறு நாட்டு தலைவர்கள் பரிசு பொருட்களை வழங்குகின்றனர். இவை அனைத்தும் டெல்லியில் உள்ள தேசிய கலைக்கூடத்தில் சேகரித்து வைக்கப்படும். பின்னர் அந்த பொருட்கள் ஏலம் விடப்பட்டு அதில் வரும் தொகை கங்கையை தூய்மைப்படுத்தும் […]

பிரதமர் மோடிக்கு வந்த பரிசுப் பொருள்களை ஏலம் எடுப்பதற்கு அக்டோபர் 12ஆம் தேதி வரை நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி பங்கேற்கும் அரசு மற்றும் அரசியல் நிகழ்ச்சிகள், மாநாடுகளில் அவருக்கு பல்வேறு வகையான பரிசு பொருட்கள் வழங்கப்படுகின்றது. இதேபோல் வெளிநாடுகளுக்கு செல்லும்போதும் பிரதமருக்கு பல்வேறு நாட்டு தலைவர்கள் பரிசு பொருட்களை வழங்குகின்றனர். இவை அனைத்தும் டெல்லியில் உள்ள தேசிய கலைக்கூடத்தில் சேகரித்து வைக்கப்படும். பின்னர் அந்த பொருட்கள் ஏலம் விடப்பட்டு அதில் வரும் தொகை கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டத்துக்கு செலவிடப்படுகிறது.

கலைக்கூடத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள 1,200 பரிசு பொருட்களின் ஆன்லைன் ஏலம் கடந்த மாதம் 16ம் தேதி தொடங்கியது. இந்த ஏலம் அக்டோபர் 2ம் தேதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஏலத்தின் கடைசி நாளான நேற்று மேலும் 10 நாட்கள் நீட்டிக்கப்படுவதாக மத்திய கலாச்சார அமைச்சகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, கலாச்சார அமைச்சகத்தின் டிவிட்டர் பதிவில், ‘பிரதமரின் பரிசுகளை மின்னணு ஏலத்தில் எடுப்பதற்கான கடைசி தேதி அக்டோபர் 12ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது’ என கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu