ஆடி கார்களின் சில்லறை விற்பனை 29% உயர்வு

October 8, 2022

ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த சொகுசு கார் உற்பத்தியாளரான ஆடி, வெள்ளிக்கிழமை அன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஆடி நிறுவனத்தின் கார்களுக்கு, இந்தியாவில் வரவேற்பு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடத்தின் ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில், மொத்தமாக, 2947 ஆடி கார்கள் இந்தியாவில் விற்பனையாகி உள்ளன. முந்தைய ஆண்டில், இதே காலகட்டத்தில், 2291 கார்கள் மட்டுமே விற்பனையாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே, சில்லறை வணிகத்தில் ஆடி நிறுவனம் 29 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. […]

ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த சொகுசு கார் உற்பத்தியாளரான ஆடி, வெள்ளிக்கிழமை அன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஆடி நிறுவனத்தின் கார்களுக்கு, இந்தியாவில் வரவேற்பு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடத்தின் ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில், மொத்தமாக, 2947 ஆடி கார்கள் இந்தியாவில் விற்பனையாகி உள்ளன. முந்தைய ஆண்டில், இதே காலகட்டத்தில், 2291 கார்கள் மட்டுமே விற்பனையாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே, சில்லறை வணிகத்தில் ஆடி நிறுவனம் 29 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து பேசிய ஆடி நிறுவனத்தின் இந்தியப் பிரிவு தலைவர் பல்பீர் சிங் திலான், "உலகளாவிய முறையில் விநியோகச் சங்கிலி சிக்கல்கள் அதிகரித்துள்ளன. அத்துடன், செமி கண்டக்டர் பற்றாக்குறையும் நிலவுகிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையிலும், நாங்கள் வழக்கமான முறையில் வாடிக்கையாளர்களுக்கு எங்கள் கார்களை கொண்டு சேர்த்தோம். அதனால், வாடிக்கையாளர்களின் நன் மதிப்பை பெற்றுள்ளோம். இந்த வருடத்தின் முதல் 9 மாதங்களில், நல்ல முன்னேற்றம் பதிவாகியுள்ளது. இது எதிர்கால முன்னேற்றத்திற்கான அஸ்திவாரம் ஆகும்” என்று கூறினார்.

ஆடி நிறுவனம், ஆடி அப்ரூவ்ட் ப்ளஸ் (Audi Approved: Plus) என்ற பெயரில், ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட கார்கள் (Pre Owned Cars) வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் சார்பில், 2022 ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில், 73 சதவீத வளர்ச்சி பதிவாகி உள்ளது. எனவே, வரும் பண்டிகை காலத்தில், பயன்படுத்தப்பட்ட கார்கள் வணிகத்தை மேலும் விரிவாக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தற்போதைய நிலையில், இந்தியாவில் 18 ஆடி அப்ரூவ்ட் ப்ளஸ் ஷோரூம்கள் உள்ளன. அதன் எண்ணிக்கையை இந்த வருட இறுதிக்குள் 22 ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தத் தகவல்கள் கூறப்பட்டுள்ளன. மேலும், புதிய ஆடி கார்களைப் பொறுத்தவரை, அண்மையில் களமிறங்கி உள்ள A8, Q7 ஆகிய மாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாகவும், A4, A6, Q5, RS ஆகிய வாகனங்களின் விற்பனையில் கணிசமான முன்னேற்றம் காணப்படுவதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu