ஆடியோ கசிவு தொடர்பாக பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பதவி விலக வேண்டும் என முன்னாள் பிரதமர் இம்ரான்கான் வலியுறுத்தியுள்ளார்.
பிரதமர் மற்றும் அதிகாரிகளுக்கு இடையேயான உரையாடல்கள் தொடர்பான ஆடியோக்கள் கசிந்தது. இதனால் ஏற்பட்ட பாதுகாப்பு மீறல் குறித்து விசாரிக்க பாகிஸ்தான் உளவுத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பதவி விலக வேண்டும் என முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அரசு கல்லூரி பல்கலைக்கழகத்தில் (ஜிசியு) உரையாற்றிய போது இம்ரான் கான் கூறியதாவது, ஆடியோ கசிவுகளில், ஷெபாஸ் தனது மகள் மரியம் நவாஸின் மருமகனுக்காக (ரஹீல் முனீர்) இந்தியாவிலிருந்து இயந்திரங்களை கொண்டு வருவது பற்றி பேசியுள்ளார். இது ஷெபாஸுக்கு அவமானம். ஆதலால் அவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று இம்ரான் கான் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாஸ், தேர்தல் ஆணையம் இம்ரான் கானை விரைவில் தகுதி நீக்கம் செய்யப் போகிறது என்று பேசிய மற்றொரு ஆடியோ விரைவில் வெளியாகும் என்று கான் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி கசிந்த ஆடியோக்கள் பாகிஸ்தானின் பிரதமர் அலுவலகத்தின் இணைய பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பியுள்ளதாக இம்ரான் ௯றினார்.