ஆஸ்திரேலியாவில், நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, 2 ஹெலிகாப்டர்கள் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 3 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிஸ்பேன் நகருக்கு தெற்கே, கோல்ட் கோஸ்ட் கடற்கரை பகுதியில் உள்ள சுற்றுலா தளத்தில், மதியம் 2 மணியளவில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. இரண்டு ஹெலிகாப்டர்களும் மோதிய பின்னர், சீ வேர்ல்ட் ரிசார்ட் அருகில் தரையிறங்கின. ஒரு ஹெலிகாப்டர் சிறிதான சேதத்துடன் தரை இறங்கியது. மற்றொன்று நொறுங்கிய நிலையில் கீழே விழுந்தது. இரண்டு ஹெலிகாப்டர்களிலும் மொத்தமாக 13 பேர் இருந்துள்ளனர். அவர்களில், 4 பேர் உயிரிழந்துள்ளனர். 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 6 பேருக்கு சிறிதான காயங்கள் ஏற்பட்டுள்ளன. காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குயின்ஸ்லாந்து காவல்துறை இது தொடர்பான தகவல்களை தெரிவித்துள்ளது.