உக்ரைனுக்கு ஆஸ்திரேலியா 100 மில்லியன் டாலர் நிதியுதவி

April 29, 2024

உக்ரைனுக்கு 100 மில்லியன் டாலர் மதிப்பிலான நிதி உதவி வழங்க ஆஸ்திரேலியா முடிவு செய்துள்ளது. ரஷ்யா உக்ரைனிடையே கடந்த இரண்டு ஆண்டுகளாக போர் நடைபெறுகிறது. நேட்டோ உறுப்பு நாடுகள் உக்ரைனுக்கு நிதியுதவி மற்றும் ராணுவ உதவி செய்வதால் ரஷ்யாவை எதிர்த்து உக்ரைன் போரிட்டு வருகிறது. இந்நிலையில், ஆஸ்திரேலிய பாதுகாப்பு துறை மந்திரி ரிச்சர்டு மர்லெஸ் உக்ரைனுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் அங்கு உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷமிஹாலை சந்தித்து பேசினார். பின்னர் ஆஸ்திரேலிய அரசு சார்பில் உக்ரைனுக்கு […]

உக்ரைனுக்கு 100 மில்லியன் டாலர் மதிப்பிலான நிதி உதவி வழங்க ஆஸ்திரேலியா முடிவு செய்துள்ளது.

ரஷ்யா உக்ரைனிடையே கடந்த இரண்டு ஆண்டுகளாக போர் நடைபெறுகிறது. நேட்டோ உறுப்பு நாடுகள் உக்ரைனுக்கு நிதியுதவி மற்றும் ராணுவ உதவி செய்வதால் ரஷ்யாவை எதிர்த்து உக்ரைன் போரிட்டு வருகிறது. இந்நிலையில், ஆஸ்திரேலிய பாதுகாப்பு துறை மந்திரி ரிச்சர்டு மர்லெஸ் உக்ரைனுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் அங்கு உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷமிஹாலை சந்தித்து பேசினார். பின்னர் ஆஸ்திரேலிய அரசு சார்பில் உக்ரைனுக்கு 100 மில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உதவி வழங்கப்படுகிறது என்று அவர் அறிவித்தார். அதில் வெடிமருந்து, ட்ரோன், குறுகிய தூர வான் பாதுகாப்பு அமைப்பு உள்ளிட்டவை அடங்கும். மேலும் ஆஸ்திரேலியா உக்ரைனுக்கு உறுதுணையாக நிற்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu