அமெரிக்காவிடமிருந்து ரூபாய் 54 ஆயிரம் கோடி மதிப்பிலான போர் விமானங்களை ஆஸ்திரேலியா அமெரிக்காவிடமிருந்து வாங்க முடிவு செய்துள்ளன.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆஸ்திரேலியாவில் உள்ள கடற்கரையில் கூட்டுப் போர் பயிற்சி நடைபெற்று வருகிறது. இதில் 30 ஆயிரம் ராணுவ வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கடற்படை மற்றும் விமானப்படை திறன் இயக்கம் போன்றவற்றில் பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்த அமெரிக்காவிடமிருந்து சுமார் 54 ஆயிரம் கோடி வரை மதிப்பிலான 20 புதிய சி-30 ஹெர்குலஸ் விமானங்களை ஆஸ்திரேலியா வாங்குவதாக அறிவித்துள்ளது. இது 4 என்ஜின்கள் கொண்டது. மேலும் முதல் ஹெர்குலஸ் விமானம் வரும் 2027ம் ஆண்டிலிருந்து வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.














