ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனீஸ், பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிப்பதாக அறிவித்து, அதை ஐ.நா. கூட்டத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்போவதாக கூறினார்.
ஆஸ்திரேலிய அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர், “காசாவில் இனப்படுகொலை நடக்கிறது; குழந்தைகள் பசியால் உயிரிழக்கின்றனர்” என்று தெரிவித்தார். மோதலுக்கு முடிவுக்கான இருநாடுகள்தான் நிலையான தீர்வாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார். செப்டம்பரில் நடைபெறும் ஐ.நா. பொதுச் சபையின் 80வது கூட்டத்தொடரில், பாலஸ்தீன அங்கீகாரம் நடைமுறைப்படுத்தப்படும் என அவர் உறுதி தெரிவித்தார். ஆஸ்திரேலியாவின் இந்த முடிவை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடுமையாக விமர்சித்துள்ளார். தற்போது 193 ஐ.நா. நாடுகளில் 147 நாடுகள் பாலஸ்தீனத்தை ஏற்கனவே அங்கீகரித்துள்ளன. ஜி20 உறுப்புகளில் பலரும் அங்கீகரித்துள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் சில மேற்கத்திய நாடுகள் மட்டும் இதுவரை அங்கீகரிக்கவில்லை.