உக்ரைனுக்கு 600 கோடி ரூபாயை ஆஸ்திரேலியா உதவியாக அளிக்கிறது.
ரஷிய- உக்ரைன் போரில் உக்ரைனுக்கு உதவி வரும் நாடுகளில் ஒன்றாக தற்போது நேட்டோ அமைப்பில் சேராத ஆஸ்திரேலியா உதவி வருகிறது. அந்நாடு சமீபத்திய உதவியாக உக்ரைனுக்கு கூடுதலாக 70 ராணுவ வாகனங்களை அனுப்புகிறது. 110 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் தொகுப்பை உதவியாக அதிபர் அந்தோணி அல்பானிஸ் அறிவித்துள்ளார்.
மேலும் "இந்த உதவி, ரஷியாவில் சென்ற வார இறுதியில் நடந்த உள்நாட்டு ராணுவ குழப்பத்திற்கு முன்பே பரிசீலனையில் இருந்தது. இதன் மூலம் 28 'M113' கவச வாகனங்கள், 14 சிறப்பு நடவடிக்கை வாகனங்கள், 28 நடுத்தர டிரக்குகள், 14 டிரெய்லர்கள் மற்றும் 105 மி.மீட்டர் பீரங்கி வெடிபொருட்கள் வழங்கப்படும். ரஷியாவின் நடவடிக்கைகளை கண்டித்து எதிர்ப்பதிலும் உக்ரைன் வெற்றியை அடைய உதவுவதிலும் ஆஸ்திரேலியா உறுதியாக உள்ளது'' என்று கூறினார்.














