ஆஸ்திரேலியா நிரந்தர இடம்பெயர்வு விசாக்களின் எண்ணிக்கையை உயர்த்துகிறது

September 2, 2022

பணியாளர் பற்றாக்குறையை சமாளிக்க ஆஸ்திரேலியாவானது நிரந்தர இடம்பெயர்வுக்கான விசாக்களின் எண்ணிக்கையை உயர்த்துகிறது. நிலவி வரும் தொழிலாளர் பற்றாக்குறையால் வணிகங்கள் பாதிக்கப்படுகின்றன. இதனை போக்க ஆஸ்திரேலிய அரசு தனது நிரந்தர குடியேற்ற எண்ணிக்கையை நடப்பு நிதியாண்டில் இ௫ந்து 35,000 முதல் 195,000 வரை உயர்த்த முடிவு செய்துள்ளது. அதாவது கோவிட் -19 தொற்று காலத்தில் பாதுகாப்புக்காக ஆஸ்திரேலியா தனது எல்லைகளை சுமார் இரண்டு ஆண்டுகளாக மூடியது. அதனால் விடுமுறைக்கு சென்ற தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களின் வ௫கை தடைபட்டது. அதன் […]

பணியாளர் பற்றாக்குறையை சமாளிக்க ஆஸ்திரேலியாவானது நிரந்தர இடம்பெயர்வுக்கான விசாக்களின் எண்ணிக்கையை உயர்த்துகிறது.

நிலவி வரும் தொழிலாளர் பற்றாக்குறையால் வணிகங்கள் பாதிக்கப்படுகின்றன. இதனை போக்க ஆஸ்திரேலிய அரசு தனது நிரந்தர குடியேற்ற எண்ணிக்கையை நடப்பு நிதியாண்டில் இ௫ந்து 35,000 முதல் 195,000 வரை உயர்த்த முடிவு செய்துள்ளது. அதாவது
கோவிட் -19 தொற்று காலத்தில் பாதுகாப்புக்காக ஆஸ்திரேலியா தனது எல்லைகளை சுமார் இரண்டு ஆண்டுகளாக மூடியது. அதனால் விடுமுறைக்கு சென்ற தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களின் வ௫கை தடைபட்டது. அதன் விளைவாக ஆஸ்திரேலியாவின் வேலையின்மை விகிதம் 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 3.4% உயர்ந்துள்ளது. அதனால் தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்க , நாட்டின் வருடாந்திர குடியேற்றத்தின் அளவை 160,000 -லிருந்து உயர்த்துமாறு வணிகங்கள் அரசாங்கத்தை வலியுறுத்தி வருகின்றன. இதற்கிடையில் வெளிநாடுகளில் இருந்து திறமையான ஊழியர்களை ஈர்க்க ஆஸ்திரேலியா எண்ணுகிறது. இ௫ப்பினும் விசா செயலாக்கத்தில் உள்ள முரன்பாடுகளால் தொழிலாளர் பற்றாக்குறை நிலவுகிறது. ஆகவே விசா செயலாக்கத்தை விரைவுபடுத்துவதற்காக அரசாங்கம் 25 மில்லியன் டாலர்கள் ஒதுக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu