உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரை இறுதியாட்டம் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணி இடையே நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய தென்னாப்பிரிக்கா 212 ரன்களை எடுத்து ஆல் அவுட் ஆனது. இதில் டேவிட் மில்லர் சதம் எடுத்து அவுட் ஆனார். இதனை அடுத்து களம் இறங்கிய ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர்களான டிராவிஸ் ஹெட் பொறுப்புடன் ஆடி அரை சதம் அடித்து 62 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இறுதியில் ஆஸ்திரேலியா 7 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றுள்ளது. இதனை அடுத்து ஆஸ்திரேலியா அணி எட்டாவது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. அதை தொடர்ந்து இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கான இறுதிப்போட்டி வரும் ஞாயிறு அன்று நடைபெற உள்ளது.