ஆஸ்திரேலியாவில் புதிய குடியேற்ற விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா உள்துறை அமைச்சர் க்ளியர் ஓ நெயில் புதிய குடியேற்ற சட்ட திட்டங்களை அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ஜூன் 2023 ஆண்டு கணக்கின்படி 5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இங்கு குடியேறியுள்ளனர். தற்போதைய குடியேற்ற சட்ட விதிகளில் குளறுபடிகள் உள்ளன. அவை மாற்றப்பட வேண்டியவை ஆகும். ஆஸ்திரேலியாவிற்கு குடியேறுவோர் எண்ணிக்கை இனி படிப்படியாக குறைக்கப்படும். 2025 ஜூன் மாதத்தில் இருந்து தற்போது உள்ள அனுமதி 50 சதவீதத்திற்கும் குறைவாக மாற்றப்படும். சர்வதேச மாணவர்களுக்கு கல்வி பயில நடத்தப்படும் பிடிஇ தேர்வு இன்னும் கடினமாக்கப்படும். ஒரு முறை அங்கு கல்விக்காக அனுமதி பெற்றவர்கள் இரண்டாம் முறை வர முயற்சித்தால் பரிசீலனைகள் கடுமையாக்கப்படும் என்றார்.
தற்போது சர்வதேச மாணவர்கள் ஆறு லட்சத்திற்கும் மேல் ஆஸ்திரேலியா பல்கலைக்கழகங்களில் பயின்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.