ஆஸ்திரேலிய ராணுவத்தில் இருந்து தைவான் ரக ஹெலிகாப்டர்கள் விடுவிக்கப்பட்டுள்ளன. கடந்த ஜூலை மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ராணுவ பயிற்சியின் போது எம்.ஆர்.எச் 90 தைவான் ரக ஹெலிகாப்டர்கள் பங்கு பெற்றன. அப்போது குயின்ஸ்லாந்து மாகாண கடற்கரை அருகே இரண்டு ஹெலிகாப்டர்கள் விழுந்து விபத்துக்குள்ளானது.இதில் ராணுவ 4 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதன்பின் கடந்த மார்ச் மாதம் ஒரு தைவான் ரக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த விபத்து சம்பவங்கள் குறித்து ராணுவ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். எனினும் தைபான் ரக ஹெலிகாப்டர் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது. இந்நிலையில், வீரர்களின் பாதுகாப்பு கருதி எம்ஆர்எச் 90 தைவான் ரக ஹெலிகாப்டர்கள் ராணுவத்தில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. அதற்கு பதிலாக யூஎச் 60 ரக ஹெலிகாப்டர்கள் சுமார் 40 என்ற அளவில் கடற்படையில் சேர்க்க உள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு மந்திரி ரிச்சர்ட் மார்லஸ் கூறியுள்ளார்.














