ஆஸ்திரேலிய கடற்படை வீரா்கள் மீது சீனா ஒலியலைத் தாக்குதல்

November 20, 2023

ஆஸ்திரேலிய கடற்படை வீரர்கள் மீது சீனா ஒலியலை தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது குறித்து ஆஸ்திரேலியா பாதுகாப்புத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்படுவது, சர்வதேச கடல் எல்லையில் அமைந்துள்ள ஜப்பானின் சிறப்பு பொருளாதார மண்டலம் வழியாக ஆஸ்திரேலியாவின் எச்சம்ஏஎஸ் டுவூம்பா கப்பல் சென்று கொண்டிருந்தது. அப்போது ப்ரொபலர்களில் மீன்வலை சிக்கிக் கொண்டது. அதனை நீக்க கடற்படை வீரர்கள் கடலுக்குள் குதித்தனர். அப்போது சீன கடற்படை கப்பலில் இருந்து ஒலியலை கருவி இயக்கினர். இதில் ஆஸ்திரேலியா […]

ஆஸ்திரேலிய கடற்படை வீரர்கள் மீது சீனா ஒலியலை தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது குறித்து ஆஸ்திரேலியா பாதுகாப்புத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்படுவது, சர்வதேச கடல் எல்லையில் அமைந்துள்ள ஜப்பானின் சிறப்பு பொருளாதார மண்டலம் வழியாக ஆஸ்திரேலியாவின் எச்சம்ஏஎஸ் டுவூம்பா கப்பல் சென்று கொண்டிருந்தது. அப்போது ப்ரொபலர்களில் மீன்வலை சிக்கிக் கொண்டது. அதனை நீக்க கடற்படை வீரர்கள் கடலுக்குள் குதித்தனர். அப்போது சீன கடற்படை கப்பலில் இருந்து ஒலியலை கருவி இயக்கினர். இதில் ஆஸ்திரேலியா கடற்படை வீரர்கள் காயமடைந்தனர். சீனாவின் இந்த நடவடிக்கை கவலையாக உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.முன்னதாக அமெரிக்கா உட்பட பல நாடுகள் தங்கள் கடற்படை வீரர்கள் மீது சீன ராணுவம் ஒலியலை தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டி இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இது போன்ற நடவடிக்கையால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இது சர்வதேச அளவிலான பதட்டத்தை ஏற்படுத்தும் என்று அறிவியல் ஆலோசகர்கள் கூறுகின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu