ஆஸ்திரேலியா, கோல்டன் விசா திட்டத்தை ரத்து செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆஸ்திரேலியாவில், கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் கோல்டன் விசா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, வெளிநாடுகளைச் சேர்ந்த பெரு முதலீட்டாளர்களுக்கு ஆஸ்திரேலிய குடியுரிமை வழங்கப்பட்டு வருகிறது. ஆஸ்திரேலியாவில் முதலீடுகளை அதிகரிக்கும் நோக்கில் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால், இந்த திட்டத்தால் மிகப்பெரிய முதலீடுகள் கிடைக்கவில்லை எனவும், ஆஸ்திரேலிய பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படவில்லை எனவும், கூறப்படுகிறது. மேலும், கோல்டன் விசா திட்டத்தில் ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்றவர்களில் பெரும்பாலானவர்கள் சீனாவை சேர்ந்தவர்கள். அவர்கள் சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக 2016 ல் உறுதி செய்யப்பட்டது. இவற்றின் காரணமாக, கோல்டன் விசா திட்டத்தை ரத்து செய்ய, ஆஸ்திரேலிய அரசு பரிசீலித்து வருகிறது.