நேற்று சிட்னி நகரில் உள்ள தேவாலயத்தில் பாதிரியார் ஒருவர் மீது கத்திக்குத்து சம்பவம் நடந்தது.
ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் கடந்த சனி அன்று வணிக வளாகம் ஒன்றில் 40 வயது நபர் ஒருவர் சரமாரியாக கத்தி குத்து தாக்குதலில் ஈடுபட்டார். அதில் ஆறு பேர் பலியாகினர். தற்போது அதேபோல் ஒரு மீண்டும் ஒரு சம்பவம் சிட்னியில் நடந்துள்ளது.
சிட்னி நகரில் உள்ள வாக்குலே பகுதியில் குட் ஷெப்பர்ட் தேவாலயம் அமைந்துள்ளது. இங்கு நேற்று இரவு வழிபாடு நடைபெற்றது. அப்போது பிரசங்கம் செய்து கொண்டிருந்த பாதிரியார் மீது ஒருவர் கத்தியால் குத்தி குத்தினார். இதில் பாதிரியார் உட்பட 4 பேர் காயமடைந்தனர். இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் சென்றனர். அங்கு தாக்குதல் நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த நபரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த தொடர் கத்திகுத்து சம்பவங்களால் மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.