கனடா, ஜெர்மனியை போல ஆஸ்திரேலிய குடியுரிமை விதிகளில் மாற்றங்கள்

April 27, 2023

கனடா, ஜெர்மனி ஆகிய நாடுகளைப் போலவே, தனது குடியேற்ற விதிகளை எளிமையாக மாற்றி அமைக்க உள்ளதாக ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. இதன் மூலம், வெளிநாடுகளில் இருந்து, அதிக எண்ணிக்கையிலான திறன் வாய்ந்த பணியாளர்கள் ஆஸ்திரேலியாவுக்கு செல்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் வாயிலாக, அந்நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும் என கருதப்படுகிறது. இது குறித்த அறிவிப்பை வெளியிட்டு பேசிய ஆஸ்திரேலியாவின் உள்துறை அமைச்சர் கிளாரி ஓ. நீல், “நம் நாட்டில் நடைமுறையில் உள்ள குடியேற்ற விதிகள், நமது வர்த்தகத்திற்கு இழப்பை […]

கனடா, ஜெர்மனி ஆகிய நாடுகளைப் போலவே, தனது குடியேற்ற விதிகளை எளிமையாக மாற்றி அமைக்க உள்ளதாக ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. இதன் மூலம், வெளிநாடுகளில் இருந்து, அதிக எண்ணிக்கையிலான திறன் வாய்ந்த பணியாளர்கள் ஆஸ்திரேலியாவுக்கு செல்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் வாயிலாக, அந்நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும் என கருதப்படுகிறது.

இது குறித்த அறிவிப்பை வெளியிட்டு பேசிய ஆஸ்திரேலியாவின் உள்துறை அமைச்சர் கிளாரி ஓ. நீல், “நம் நாட்டில் நடைமுறையில் உள்ள குடியேற்ற விதிகள், நமது வர்த்தகத்திற்கு இழப்பை தருகிறது. புலம்பெயர்ந்து வருபவர்களுக்கும் இழப்பை தருகிறது. முக்கியமாக, ஆஸ்திரேலியர்களுக்கே இழப்பாக அமைகிறது. எனவே, இது நீடிக்க முடியாது” என்று கூறியுள்ளார். மேலும், “திறன் வாய்ந்த பணியாளர்களுக்கான விசா நடைமுறை விரைவாகவும், எளிமையாகவும் மாற்றப்படும். வெளிநாட்டு மாணவர்களை ஈர்க்கும் விதமாக திட்டங்கள் கொண்டுவரப்படும். மேலும், ஆஸ்திரேலியாவில் நிரந்தர வசிப்பிடம் கோரி விண்ணப்பித்து, நிராகரிக்கப்பட்டவர்களுக்கு, இந்த வருடத்திற்குள் அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும்” என்று கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu