ஆஸ்திரேலியாவை சேர்ந்த நிருபர் செங் லே, சீனாவால் சிறைபிடிக்கப்பட்டு இருந்தார். தங்கள் நாட்டை உளவு பார்த்ததாக குற்றம் சுமத்தப்பட்டு, அவரை சீனா கைது செய்தது. தற்போது அவரை 3 ஆண்டுகள் கழித்து விடுவித்துள்ளது. செங் லே, மெல்போர்ன் திரும்பி உள்ளதாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி ஆல்பன்ஸ் தெரிவித்துள்ளார்.
சீனாவின் தேசிய ஊடகத்தில் முக்கிய தொகுப்பாளராக செங் லே இருந்து வந்தார். கடந்த 3 வருடங்களாக சிறையில் இருந்த அவர், ஆஸ்திரேலிய பிரதமரின் சீன பயணத்துக்கு முன்பாக விடுவிக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. அவரது விடுதலை மூலம், அவரது குடும்பத்தினர் நிம்மதி அடைந்துள்ளதாக, ஆஸ்திரேலிய பிரதமர் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஆஸ்திரேலியா சீனா உறவு சுமூகம் அடைந்துள்ளதாக கூறியுள்ளார்.














