பூமியில் உயிர்கள் தோன்றியது குறித்து விஞ்ஞானிகள் பல ஆராய்ச்சிகள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், மேற்கு ஆஸ்திரேலியா பகுதியில் 3.48 பில்லியன் வருடங்கள் பழமையான பாறை படிமங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவை Stromatolites என்னும் நுண்ணுயிரிகளின் படிமங்களால் ஆனவை என்று தெரியவந்துள்ளது. அதாவது, இந்த பாறைகள் புவியியல் அடிப்படையில் இல்லாமல், உயிரியல் அடிப்படையில் தோன்றியவை என தெரிய வந்துள்ளது. ஆப்டிகல் மைக்ரோஸ்கோபி, ராமன் ஸ்பெக்ட்ரோஸ்கோபி, லேசர் அப்ளிகேஷன் உள்ளிட்ட நவீன பரிசோதனைகளின் மூலம் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த பாறைகள் மூலம், பல பில்லியன் வருடங்களுக்கு முன்னர், பூமியில் உயிர்களின் தோற்றம் உருவானது குறித்து அறிய முடியும். அந்த நோக்கத்தில் தொடர்ந்து பல்வேறு ஆராய்ச்சிகள் இங்கு தொடங்கியுள்ளன. இதனுடன், செவ்வாய் கிரகத்தில் உள்ள பாறைகளின் படிமங்களை ஒப்பிட்டு, ஆராய்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம், செவ்வாய் கிரகத்தில் உயிர்களின் தோற்றம் குறித்த சாத்தியக்கூறுகள் அறியப்படும்.














