ஆஸ்திரேலியா என்றாலே கங்காருக்கள் தான் நினைவுக்கு வரும். அங்கு அதிகமாக காணப்படும் விலங்கினமாக கங்காரு உள்ளது. எனினும், குறிப்பிட்ட சில காலங்களில், கங்காருவின் எண்ணிக்கை மிகவும் அதிகரிக்கிறது. இதனால், ஆஸ்திரேலியாவில் சுற்றுச்சூழல் சமநிலை பாதிக்கப்படுகிறது.
கங்காருக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, அவற்றுக்கான உணவு தேவை பூர்த்தி அடைவதில்லை. குறிப்பாக, பஞ்சம் நிலவும் காலங்களில், கங்காருக்கள் பட்டினியால் இறக்கும் அவல நிலை ஏற்படுகிறது. மேலும், கங்காருக்கள் பட்டினியால் தெருக்களில் அலைந்து திரிந்து உணவுக்காக ஏங்குவதும், கழிவறைகளில் உள்ள சுத்தம் செய்யும் காகிதங்களை உண்பதும் ஆங்காங்கே காணப்படுகின்றன. கடந்த முறை பஞ்சம் ஏற்பட்டபோது, 80 முதல் 90% கங்காருக்கள் பட்டினியால் இருந்ததாக கூறப்படுகிறது. எனவே, கங்காருக்கள் பட்டினி கிடந்து சாவதற்கு பதிலாக, அவற்றை அழிப்பதற்கு அனுமதி கொடுக்க அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர்.