மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டியின் அரை இறுதி பிரிவில் செர்பியாவின் ஜோகோவிச் தோல்வியடைந்தார்.
ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் அரை இறுதி சுற்று ஜோகோவிச் இத்தாலி வீரர் ஜானிக் சின்னருடன் மோதினார். இதில் முதல் இரண்டு சுற்றுக்களில் ஜானிக் சின்னர் வென்றார். மூன்றாவது செட்டை ஜோகோவிச் வென்றார். இறுதியில் ஜானிக் சின்னர் 6-1,6-2,6-7(6-8),6-3 என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளார்.














