ஆஸ்திரேலியாவில் பெர்த் நகரில் 16 வயது சிறுவன் ஒருவன் காவல் துறையினரால் சுடப்பட்டு உயிரிழந்தான்.
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரத்தில் வில்லடன் என்ற பகுதி உள்ளது. இங்குள்ள ஒரு வணிக வளாகத்தில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் ஒரு ஆண் கத்தியால் குத்தப்பட்டதாக காவல்துறைக்கு தகவல் வந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்தனர். அப்போது தாக்குதல் நடத்தியது 16 வயது சிறுவன் என்று தெரியவந்தது. காவல்துறையினரை கண்ட சிறுவன் அவர்களையும் கத்தியால் குத்த முற்பட்டான் என்று கூறப்படுகிறது. உடனே அவனை சிறைபிடிக்க போலீசார் முயற்சி செய்தனர். ஆனால் அது முடியாமல் போனது. அதையடுத்து சிறுவனை காவல்துறையினர் சுட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த சிறுவன் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டான். எனினும், அங்கு அந்த சிறுவன் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தான். சிறுவனால் குத்தப்பட்ட 30 வயது மதிக்கத்தக்க ஆண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று காவல்துறை கூறியுள்ளது.