அலுவலக நேரத்திற்கு பிறகு அழைப்புகளை மறுக்கும் உரிமை குறித்த சட்டம் ஆஸ்திரேலியாவில் வரவுள்ளது.
அலுவலக நேரத்திற்கு பிறகு செல்போன்களை ஸ்விட்ச் ஆஃப் செய்யும் உரிமை வழங்கும் சட்டம் ஆஸ்திரேலியா தொழிலாளர்களுக்கு வழங்கப்பட உள்ளது. வேலை நேரத்திற்கு பின் அலுவலகங்களில் இருந்து வரும் குறுஞ்செய்திகள் மற்றும் அழைப்புகள் ஆகியவற்றை புறக்கணிக்கும் உரிமையை தொழிலாளர்களுக்கு அளிக்கும் புது சட்டம் இது. ஆஸ்திரேலியா அரசு விரைவில் இதனை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த மசோதா இன்னும் ஒரு வாரத்திற்குள் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த சட்டம் ஆஸ்திரேலியா பசுமை கட்சி மற்றும் சுயேச்சை உறுப்பினர்களால் விரைவில் நிறைவேற்றப்படுகிறது.
ஏற்கனவே ஸ்பெயின், பிரான்ஸ், பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளில் இந்த சட்டம் நடைமுறையில் உள்ளது. இந்த சட்டத்தை பல்வேறு நாடுகளும் அமல்படுத்துவது குறித்து யோசித்து வருகின்றன.














