கியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் 2000 கோடி முதலீடு

January 12, 2023

தென் கொரியாவின் வாகன நிறுவனமான கியா நிறுவனத்தின் இந்திய பிரிவு 2000 கோடி ரூபாயை, அடுத்த 4 ஆண்டுகளில் இந்தியாவில் முதலீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. மின்சார வாகனத் துறையில் வளர்ச்சி அடைய இந்த முதலீடு செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் 2025 ஆம் ஆண்டிற்குள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மின்சார வாகனம் ஒன்றை சந்தைக்கு கொண்டு வர கியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தற்போதைய நிலையில், இந்தியாவில், ஒரு மின்சார கார் மாடலை கியா விற்பனை செய்கிறது. இந்நிலையில், […]

தென் கொரியாவின் வாகன நிறுவனமான கியா நிறுவனத்தின் இந்திய பிரிவு 2000 கோடி ரூபாயை, அடுத்த 4 ஆண்டுகளில் இந்தியாவில் முதலீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. மின்சார வாகனத் துறையில் வளர்ச்சி அடைய இந்த முதலீடு செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் 2025 ஆம் ஆண்டிற்குள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மின்சார வாகனம் ஒன்றை சந்தைக்கு கொண்டு வர கியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

தற்போதைய நிலையில், இந்தியாவில், ஒரு மின்சார கார் மாடலை கியா விற்பனை செய்கிறது. இந்நிலையில், வரும் 2027 ஆம் ஆண்டிற்குள் உலக அளவில் 14 பேட்டரி எலக்ட்ரிக் கார் மாடல்களை கொண்டுவர கியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் ஆந்திர பிரதேச உற்பத்தி நிலையத்தில் இருந்து மின்சார வாகனங்கள் தயாரிக்கப்படும் என கூறப்படுகிறது. 2023 வாகன கண்காட்சியில் கியா இந்தியா நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு தலைவர் ஹர்தீப் சிங் பிரார் இந்த தகவல்களை உறுதி செய்துள்ளார்

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu