மே மாத வாகன விற்பனையில் இரட்டை இலக்க வளர்ச்சி

June 14, 2023

கடந்த மே மாத இந்திய சந்தையில், வாகன விற்பனை இரட்டை இலக்க வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. தொடர்ந்து, 4 சக்கர பயணிகள் வாகனங்கள், இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கு அதிக தேவை பதிவாகி வருகிறது. கடந்த மே மாதத்தில், 334247 கார்கள் தொழிற்சாலையில் இருந்து டீலர்களுக்கு கொண்டு சேர்க்கப்பட்டுள்ளன. இது வருடாந்திர அடிப்படையில் 13.5% உயர்வாகும். மேலும், இருசக்கர வாகனங்கள் விற்பனை 17.4% உயர்ந்து, 1471550 என்ற எண்ணிக்கையில் பதிவாகியுள்ளது. அத்துடன், 3 சக்கர வாகனங்கள் […]

கடந்த மே மாத இந்திய சந்தையில், வாகன விற்பனை இரட்டை இலக்க வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. தொடர்ந்து, 4 சக்கர பயணிகள் வாகனங்கள், இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கு அதிக தேவை பதிவாகி வருகிறது.

கடந்த மே மாதத்தில், 334247 கார்கள் தொழிற்சாலையில் இருந்து டீலர்களுக்கு கொண்டு சேர்க்கப்பட்டுள்ளன. இது வருடாந்திர அடிப்படையில் 13.5% உயர்வாகும். மேலும், இருசக்கர வாகனங்கள் விற்பனை 17.4% உயர்ந்து, 1471550 என்ற எண்ணிக்கையில் பதிவாகியுள்ளது. அத்துடன், 3 சக்கர வாகனங்கள் விற்பனை 70.4% உயர்ந்து 48732 எண்ணிக்கையில் பதிவாகியுள்ளது. இருசக்கர வாகனங்களில், மோட்டார் சைக்கிள் ரக வாகன விற்பனை 20.6% மற்றும் ஸ்கூட்டர் ரக வாகன விற்பனை 12% உயர்வை பதிவு செய்துள்ளது. இதன் மூலம், அனைத்து வாகன பிரிவுகளிலும் இரட்டை இலக்க வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் வினோத் அகர்வால் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu