பயணிகள் வசதிக்காக ஆவடி பஸ் நிலையம் முழுமையாக மேம்படுத்தப்பட்டு நவீன கட்டடமாக மாற்றப்பட உள்ளது.
சென்னை புறநகர் பகுதிகளை இணைக்கும் முக்கியமான ஆவடி பஸ் நிலையம் தற்போது இடப்பற்றாக்குறையுடன் செயல்பட்டு வருகிறது. இதனை நவீன வசதிகளுடன், 3 தளங்களுடன் ரூ.36.06 கோடியில் புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 65 ஆயிரம் சதுர அடியில் புதிய கட்டிடம் அமைக்கப்பட உள்ளது. உணவகம், ஷாப்பிங் பகுதி, சுத்தமான கழிப்பறைகள், நீர் சுத்திகரிப்பு மையம், 22 பஸ்களுக்கு இடமளிக்கும் பரந்த தரைத்தளம் ஆகியவை இதில் இடம்பெறும். அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் நாசர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்த இந்த பணிகள் ஆண்டு முடிவுக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.














