சென்னையைச் சேர்ந்த மின்னணு தயாரிப்பு நிறுவனமான அவலான் டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனத்தின் பொதுப் பங்கீடு கடந்த ஏப்ரல் 3ம் தேதி துவங்கியது. இன்றுடன் நிறைவடையும் இந்த பொது பங்கீடு மூலம் 865 கோடி திரட்ட நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
பொது பங்கீட்டின் போது, 320 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பங்குகள் விற்பனை செய்யப்பட உள்ளன. மேலும், 545 கோடி ரூபாய்க்கு சலுகைகள் வழங்கப்பட உள்ளது. நிறுவனத்தின் ஒரு பங்கு விலை 415 முதல் 436 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு 2847 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் வருவாய் 841 கோடியாகவும், எபிட்டா 11.6% ஆகவும், வரிக்குப் பின்னான லாபம் 68.10 கோடியாகவும் சொல்லப்பட்டுள்ளது.














