அவலோன் டெக்னாலஜிஸ் ஐபிஓ - 1% சலுகையில் பங்குகள் விற்பனை

April 18, 2023

அவலோன் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் ஐபிஓ தற்போது வெளியீட்டில் உள்ளது. முதல் 2 நாட்களுக்கு மந்தமான போக்கு காணப்பட்டாலும், இறுதி நாளான இன்று, பங்கு விற்பனை உயர்ந்துள்ளது. இந்த பொது பங்கிட்டு விற்பனை மூலம். 865 கோடி ரூபாய் நிதி திரட்ட அவலோன் டெக்னாலஜிஸ் திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மும்பை பங்கு சந்தையில், அவலோன் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் ஒரு பங்கு 431 ரூபாயாக பட்டியலிடப்பட்டுள்ளது. இது பொது பங்கிட்டு வெளியீட்டு விலையான 436 ஐ விட 1.15% குறைவாகும். எனவே, […]

அவலோன் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் ஐபிஓ தற்போது வெளியீட்டில் உள்ளது. முதல் 2 நாட்களுக்கு மந்தமான போக்கு காணப்பட்டாலும், இறுதி நாளான இன்று, பங்கு விற்பனை உயர்ந்துள்ளது. இந்த பொது பங்கிட்டு விற்பனை மூலம். 865 கோடி ரூபாய் நிதி திரட்ட அவலோன் டெக்னாலஜிஸ் திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மும்பை பங்கு சந்தையில், அவலோன் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் ஒரு பங்கு 431 ரூபாயாக பட்டியலிடப்பட்டுள்ளது. இது பொது பங்கிட்டு வெளியீட்டு விலையான 436 ஐ விட 1.15% குறைவாகும். எனவே, 1% தள்ளுபடி விலையில் பங்குகள் விற்கப்பட்டன. ஒட்டுமொத்தமாக, பொது பங்கீட்டில் 2.21 மடங்கு சந்தா பதிவு செய்யப்பட்டுள்ளது. தகுதியான நிறுவனங்களுக்கு 3.57 மடங்கு கூடுதல் விற்பனை நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், சில்லறை முதலீட்டாளர்களின் பகுதியில், 84% சந்தா பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், நிறுவனமற்ற ஏலாதாரர்களின் பகுதியில் 41% சந்தா பதிவாகியுள்ளது. எனவே, அனைத்து வகை முதலீட்டாளர்களிடம் இருந்தும், எதிர்பார்த்ததை விட குறைவான சந்தா பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நிறுவனத்தின் பங்குகள் லாப நஷ்டம் இல்லாமல் சமமாக பட்டியலிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu