கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி - இறைச்சி முட்டை விற்பனைக்கு தடை

April 20, 2024

கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் வளர்க்கப்பட்டு வந்த வாத்துக்கள் தொடர்ச்சியாக இறந்தன. கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் ஏராளமான வாத்து மற்றும் கோழிப்பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஆலப்புழா மாவட்டம் எடத்துவா பகுதியில் உள்ள பண்ணையில் வளர்க்கப்பட்ட வாத்துக்கள் தொடர்ச்சியாக இறந்ததை அடுத்து பறவை காய்ச்சல் பாதிப்பு இருக்கும் என கருதப்பட்டது. இதனை அடுத்து வாத்துகளில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டுஆய்வகத்திற்கு அனுப்பப்பட்ட சோதனையில் வாத்துகளுக்கு ஏவியான் இன்புளுயன்சா என்ற பறவை காய்ச்சல் தொற்று இருப்பது உறுதி […]

கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் வளர்க்கப்பட்டு வந்த வாத்துக்கள் தொடர்ச்சியாக இறந்தன.

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் ஏராளமான வாத்து மற்றும் கோழிப்பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஆலப்புழா மாவட்டம் எடத்துவா பகுதியில் உள்ள பண்ணையில் வளர்க்கப்பட்ட வாத்துக்கள் தொடர்ச்சியாக இறந்ததை அடுத்து பறவை காய்ச்சல் பாதிப்பு இருக்கும் என கருதப்பட்டது. இதனை அடுத்து வாத்துகளில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டுஆய்வகத்திற்கு அனுப்பப்பட்ட சோதனையில் வாத்துகளுக்கு ஏவியான் இன்புளுயன்சா என்ற பறவை காய்ச்சல் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து பறவை காய்ச்சல் தொற்று பாதித்த இடத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் வளர்க்கப்படும் வாத்து உள்ளிட்ட பறவை இனங்களை அழிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதில் தொற்று பாதித்த பகுதிக்கு அருகே 21,537 பறவைகள் வளர்க்கப்பட்டு வருவது தெரியவந்தது. இதனை அடுத்து அவற்றை கொன்று எரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் பணியை சுகாதாரத்தை ஊழியர்கள் தொடங்கியுள்ளனர். மேலும் பறவை காய்ச்சல் பாதித்த பகுதிகளில் கோழி,வாத்து, காடை போன்ற நாட்டு பறவைகள் மற்றும் அவற்றின் முட்டைகளை உண்ணவும் விற்பனை செய்யவும் 25ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu