ஆந்திராவில் பறவைக் காய்ச்சல் பரவல்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

February 12, 2025

ஆந்திராவில் கோழிக்கறி மற்றும் முட்டை விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கோழி பண்ணைகளில் பல லட்சம் கோழிகள் தினசரி இறந்து வருவதால் பொதுமக்களிடையே பெரும் பீதி ஏற்பட்டுள்ளது. ராஜ மகேந்திரவரம், மேற்கு கோதாவரி, தனுகு, வேல்பூர் ஆகிய பகுதிகள் சிகப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 3 மாதங்களுக்கு கோழிப்பண்ணைகள் வைக்கவும், கோழிக்கறி மற்றும் முட்டை விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. […]

ஆந்திராவில் கோழிக்கறி மற்றும் முட்டை விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கோழி பண்ணைகளில் பல லட்சம் கோழிகள் தினசரி இறந்து வருவதால் பொதுமக்களிடையே பெரும் பீதி ஏற்பட்டுள்ளது. ராஜ மகேந்திரவரம், மேற்கு கோதாவரி, தனுகு, வேல்பூர் ஆகிய பகுதிகள் சிகப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 3 மாதங்களுக்கு கோழிப்பண்ணைகள் வைக்கவும், கோழிக்கறி மற்றும் முட்டை விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்து கோழி குஞ்சுகள் கொண்டு வரப்படுவதை தடுத்து நிறுத்தி, அவற்றை திருப்பி அனுப்பி வருகின்றனர். 7 லாரிகளில் கொண்டு செல்லப்பட்ட கோழி குஞ்சுகள் திருப்பி அனுப்பப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu