ரூ.12 கோடியில் கட்டப்படும் அவ்வையார் மணிமண்டபம் விரைவில் திறக்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறுகையில், அவ்வையாருக்கு மணிமண்டபம் கட்டித் தரப்படும் என கடந்த 2022-23 நிதியாண்டில் அறிவிக்கப்பட்டதாகவும், இந்த மணிமண்டபம் தொடர்பான வரைபடம் முதலமைச்சரிடம் காண்பிக்கப்பட்டபோது இன்னும் சிறப்பாக அமைக்க வலியுறுத்தினார். இதனால் மறு வடிவம் செய்யப்பட்டு வருகிறது. எனவே ரூ.12 கோடி ரூபாய் செலவில் மணிமண்டபம் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது. விரைவில் இதற்கான முழுமையான பணிகள் மூன்று அல்லது நான்கு மாதங்களில் முடிக்கப்பட்டு திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.