சென்னை மெட்ரோ ரயில் சேவைக்கு புதிய அங்கீகாரம் வழங்கும் வகையில் கிரீன் ஆப்பிள் சுற்றுச்சூழல் விருது வழங்கப்பட்டிருக்கிறது.சென்னை மெட்ரோ ரயில் அதிநவீன போக்குவரத்து சேவையாக மாறி அத்தியாவசியமாக உருவெடுத்து வருகிறது. பல்வேறு நகரங்களில் இந்த சேவை தற்போது விரிவாக்கப்பட்டு வரும் நிலையில் இதற்கான வரவேற்புகள் மக்கள் மத்தியில் பெரிதாக உள்ளது. மேலும் நகரின் போக்குவரத்து நெரிசல் மிக்க இடங்களிலும் சிரமமின்றி பயணம் செய்யும் வகையில் மெட்ரோ ரயில் சேவைகளை வழங்கி வருகிறது. இது தவிர சுற்றுச்சூழலுக்கும் நன்மை செய்யும் வகையில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இயங்கி வருகிறது. இதற்கு இந்நிறுவனத்தின் அங்கீகாரத்தை வழங்கும் வகையில் லண்டன் பாராளுமன்றத்தில் கிரீன் ஆப்பிள் சுற்றுச்சூழல் விருது வழங்கப்பட்டிருக்கிறது. சென்னை மெட்ரோ ரயில் இந்தியா நிறுவனம் தங்கம் வென்றதை அடுத்து இந்த விருதுக்கான சான்றுகள் மற்றும் பச்சை நிற ஆப்பிள் சின்னம் ஒன்று கோப்பையாகவும் வழங்கப்பட்டிருக்கிறது.














