ஆக்சிஸ் வங்கி நிகர லாபம் 41% உயர்வு

July 27, 2023

ஆக்சிஸ் வங்கி தனது முதலாம் காலாண்டு நிதிநிலை அறிக்கையை நேற்று வெளியிட்டது. அதன்படி, வங்கியின் நிகர லாபம் 41% உயர்ந்து, 5797 கோடியாக சொல்லப்பட்டுள்ளது. மேலும், வங்கிக்கு வட்டி மூலமாக கிடைத்த நிகர வருவாய் 27% உயர்ந்து, 9384 கோடியாக சொல்லப்பட்டுள்ளது. அத்துடன், ஆக்ஸிஸ் வங்கியின் செயல்பாட்டு வருவாய் 50% உயர்ந்து, 8814 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆக்சிஸ் வங்கி வெளியிட்டுள்ள காலாண்டு அறிக்கையில், வங்கியின் மொத்த வாராக்கடன் 1.96% ஆக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய […]

ஆக்சிஸ் வங்கி தனது முதலாம் காலாண்டு நிதிநிலை அறிக்கையை நேற்று வெளியிட்டது. அதன்படி, வங்கியின் நிகர லாபம் 41% உயர்ந்து, 5797 கோடியாக சொல்லப்பட்டுள்ளது. மேலும், வங்கிக்கு வட்டி மூலமாக கிடைத்த நிகர வருவாய் 27% உயர்ந்து, 9384 கோடியாக சொல்லப்பட்டுள்ளது. அத்துடன், ஆக்ஸிஸ் வங்கியின் செயல்பாட்டு வருவாய் 50% உயர்ந்து, 8814 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆக்சிஸ் வங்கி வெளியிட்டுள்ள காலாண்டு அறிக்கையில், வங்கியின் மொத்த வாராக்கடன் 1.96% ஆக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டில் 2.02% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆக்சிஸ் வங்கியின் காலாண்டு முடிவுகள் எதிரொலியாக, இன்றைய வர்த்தக நாளின் தொடக்கத்தில், ஆக்சிஸ் வங்கி பங்குகள் ஒரு வருட உச்சத்தை பதிவு செய்துள்ளன. ஆக்ஸிஸ் வங்கியின் ஒரு பங்கு விலை 990 வரை உயர்ந்து வர்த்தகமானது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu