சிட்டி பேங்க் இந்தியச் செயல்பாடுகள் - இனிமேல் ஆக்சிஸ் வங்கி மேற்கொள்ளும்

March 1, 2023

சிட்டி பேங்க் குழுமத்தின் மொத்த இந்திய வாடிக்கையாளர் வர்த்தகத்தையும் ஆக்சிஸ் வங்கி கையகப்படுத்தி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 11603 கோடி ரூபாய்க்கு இந்த வர்த்தகத்தை ஆக்சிஸ் வங்கி முழுமையாக கையகப்படுத்தியுள்ளது. சிட்டி குழுமம், இந்தியா உள்ளிட்ட 13 இடங்களில் தனது செயல்பாடுகளில் இருந்து விலக முடிவு செய்ததை அடுத்து, ஆக்சிஸ் குழுமம் அதனை கையகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே, தற்போது சிட்டி பேங்க்கின் 30 லட்சம் இந்திய வாடிக்கையாளர்கள் ஆக்சிஸ் வங்கியில் இணைந்துள்ளனர். மேலும், இந்தியாவின் 18 நகரங்களில் […]

சிட்டி பேங்க் குழுமத்தின் மொத்த இந்திய வாடிக்கையாளர் வர்த்தகத்தையும் ஆக்சிஸ் வங்கி கையகப்படுத்தி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 11603 கோடி ரூபாய்க்கு இந்த வர்த்தகத்தை ஆக்சிஸ் வங்கி முழுமையாக கையகப்படுத்தியுள்ளது. சிட்டி குழுமம், இந்தியா உள்ளிட்ட 13 இடங்களில் தனது செயல்பாடுகளில் இருந்து விலக முடிவு செய்ததை அடுத்து, ஆக்சிஸ் குழுமம் அதனை கையகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே, தற்போது சிட்டி பேங்க்கின் 30 லட்சம் இந்திய வாடிக்கையாளர்கள் ஆக்சிஸ் வங்கியில் இணைந்துள்ளனர். மேலும், இந்தியாவின் 18 நகரங்களில் இருந்த, 499 ஏடிஎம்ம்கள், 21 கிளை அலுவலகங்கள், 7 தலைமை அலுவலகங்கள் ஆகியவை ஆக்சிஸ் வங்கியின் கீழ் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கையக்கப்படுத்துதல் நடவடிக்கையால், சிட்டி வங்கி வாடிக்கையாளர்கள் இடையே நிலவும் குழப்பத்தை போக்க, சில அறிவிப்புகள் வெளிவந்துள்ளன. “வங்கி கணக்கு எண், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு எண், காசோலை, ஐ எஃப் எஸ் சி எண் ஆகியவற்றில் மாற்றம் இருக்காது. சிட்டி வங்கியின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் கிடைக்கும் ரிவார்டுகளில் மாற்றம் இருக்காது. சிட்டி வங்கி மூலம் பெறப்பட்ட காப்பீடுகள் இனி ஆக்சிஸ் வங்கி மூலம் செயல்படுத்தப்படும். மேலும், வெளிநாட்டு முதலீடுகளுக்கு சிட்டி வங்கி வைப்புத் தொகை அடிப்படையில் வட்டி வழங்கப்படும். இனிமேல் புதிதாக வைப்பு வைக்கப்படும் தொகைக்கு ஆக்சிஸ் வங்கி முறைப்படி வட்டி கணக்கிடப்படும். ஏடிஎம் களிலிருந்து இலவசமாக பணம் எடுக்கும் எண்ணிக்கை முறை ஆக்சிஸ் வங்கி அளவிற்கு கூட்டப்பட்டுள்ளது. வீட்டுக் கடன் போன்றவற்றுக்கு சிட்டி வங்கியின் நிர்ணயிக்கப்பட்ட வட்டி செயல்படுத்தப்படும். இதில் மாற்றம் இருந்தால் ஆக்சிஸ் வங்கி தகவல் தெரிவிக்கும்” என்று சொல்லப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu