அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள விமான நிலையத்திற்கு ராமாயணம் எழுதிய வால்மீகியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி உத்திர பிரதேசத்தில் உள்ள அயோத்தி நகரில் ரூபாய் 11000 கோடி மதிப்பில் பணி நிறைவடைந்த திட்டங்களை தொடங்கி வைத்து சில புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். இதேபோன்று உத்திரபிரதேசத்தின் பல பகுதிகளில் ரூபாய் 4600 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கப்பட இருக்கின்றன. மேலும் அயோத்தியில் ரூபாய் 1450 கோடிக்கும் மேற்பட்ட செலவில் நவீன வசதிகளுடன் புதிய விமான நிலையத்தில் முதல் பகுதியை நாளை பிரதமர் மோடி துவங்க உள்ளார். இந்த விமான நிலையத்திற்கு ராமாயணம் எழுதிய வால்மீகியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதை போல் அயோத்தி கோவில் சந்திப்பு என்ற பெயரில் ரூபாய் 240 கோடிக்கும் மேற்பட்ட செலவில் அயோத்தியில் நவீன ரயில் நிலையத்தை தொடங்கி வைக்கிறார்.