அயோத்தி ராமர் கோவிலில் தினமும் 2 மணி நேரம் நடை அடைக்கப்பட்டு வந்தது கோவில் நடை அடைப்பு நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது
அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சென்ற வண்ணம் உள்ளனர். தினமும் காலை 4 மணிக்கு திறக்கப்படும் நடை 06:00 மணி முதல் 10:00 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகிறது. அதன் இடையே இரண்டு மணி நேரம் நடை அடைக்கப்பட்டு வந்தது . தற்போது கோவில் நடை அடைப்பு நேரம் மாற்றப்பட்டுள்ளதாக கோவிலின் தலைமை அர்ச்சகர் தெரிவித்துள்ளார். அதன்படி தினமும் 12 30 மணி முதல் 1:30 மணி வரை மட்டுமே கோவில் நடை அடைக்கப்படும் என அறக்கட்டளை முடிவு செய்துள்ளது. இந்த நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.