மெக்சிகோ நகரின் புகழ்பெற்ற அஸ்டெகா மைதானம் முழுமையாக புதுப்பிக்கப்படுகிறது.
மெக்சிகோ நகரின் புகழ்பெற்ற அஸ்டெகா மைதானம், 2026 உலகக் கோப்பையை முன்னிட்டு முழுமையாக புதுப்பிக்கப்படுகிறது. மார்ச் 26, 2026 அன்று இம்மைதானம் மறுபடியும் திறக்கப்பட உள்ளது. மாடர்ன் ஹைபிரிட் ஆடுகளம், மேம்பட்ட காற்றோட்ட வசதி, புதிய லாக்கர் அறைகள், பெரிய LED திரைகள், தரமான ஒலி அமைப்பு, உயர்தர விருந்தோம்பல் பகுதிகள், சிசிடிவி கண்காணிப்பு, லிஃப்ட் மற்றும் ஓய்வறைகள் என அனைத்தும் மாற்றம் பெறுகின்றன. கூடுதலாக, இருக்கைகள் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படுகிறது. இந்த மேம்பாடுகள், அஸ்டெகா மைதானத்தை உலகளவில் தலைசிறந்த மைதானங்களில் ஒன்றாக மாற்றும் என நம்பப்படுகிறது. இம்மைதானத்தில் 2026 உலகக் கோப்பை தொடக்க ஆட்டம் உட்பட ஐந்து முக்கிய போட்டிகள் நடைபெறவுள்ளன.