அமெரிக்கா- விமான சாகச நிகழ்ச்சியில் 2 போர் விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - 6 பேர் பலி

November 14, 2022

அமெரிக்காவின் டெக்சாஸ் பகுதியில் சனிக்கிழமை அன்று விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், இரண்டு போர் விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. மோதிய உடன், இரண்டு விமானங்களும் தீப்பற்றி பூமியில் விழுந்து நொறுங்கின. இதில், விமானத்தில் இருந்த 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இரண்டு விமானங்களும் மோதும் காட்சி இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. சாகச நிகழ்ச்சியை காண வந்த பொதுமக்கள் இந்த காணொளியை பதிவு செய்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர். சாகசத்தில் ஈடுபட்ட போது, இரண்டாம் […]

அமெரிக்காவின் டெக்சாஸ் பகுதியில் சனிக்கிழமை அன்று விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், இரண்டு போர் விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. மோதிய உடன், இரண்டு விமானங்களும் தீப்பற்றி பூமியில் விழுந்து நொறுங்கின. இதில், விமானத்தில் இருந்த 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இரண்டு விமானங்களும் மோதும் காட்சி இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. சாகச நிகழ்ச்சியை காண வந்த பொதுமக்கள் இந்த காணொளியை பதிவு செய்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.

சாகசத்தில் ஈடுபட்ட போது, இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட போர் விமானமான போயிங் பி17 விமானமும், மற்றொரு சிறிய விமானமும் ஒன்றுடன் ஒன்று மோதியது. இதில் போயிங் விமானம் தரையில் இருந்து குறைந்த உயரத்தில் நேர்கோட்டில் சென்று கொண்டிருந்தது. அப்போது பெல் பி63 கிங் கோப்ரா என்ற சிறிய ரக விமானம், சென்று கொண்டிருந்த பாதையில் இருந்து விலகி, இடது புறமாக திரும்பியது. இதனால் இரண்டு விமானங்களும் ஓரிரு வினாடிகளில் நிகழ்வு இடத்திலேயே தீப்பற்றி எரிந்து விழுந்து நொறுங்கின.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu