பபாசி சங்க தேர்தல்

November 28, 2023

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் தேர்தல் மயிலாப்பூரில் நடைபெற்றது. மயிலாப்பூரில் உள்ள பிரபல தனியார் நட்சத்திர விடுதியில் பபாசி என்று அழைக்கப்படும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் தேர்தல் நடைபெற்றது. இதில் கவிதா பப்ளிகேஷன் சேது சொக்கலிங்கம் அதன் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.மேலும் இதன் செயலாளராக நாதன் கீதம் புக் செல்லர்ஸ் முருகன், பொருளாளராக ஏசியன் பப்ளிகேஷன் டபுள்யூ ஜி சுரேஷ், தமிழ் துணைத் தலைவராக நக்கீரன் பதிப்பகம் நக்கீரன் கோபால், […]

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் தேர்தல் மயிலாப்பூரில் நடைபெற்றது.

மயிலாப்பூரில் உள்ள பிரபல தனியார் நட்சத்திர விடுதியில் பபாசி என்று அழைக்கப்படும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் தேர்தல் நடைபெற்றது. இதில் கவிதா பப்ளிகேஷன் சேது சொக்கலிங்கம் அதன் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.மேலும் இதன் செயலாளராக நாதன் கீதம் புக் செல்லர்ஸ் முருகன், பொருளாளராக ஏசியன் பப்ளிகேஷன் டபுள்யூ ஜி சுரேஷ், தமிழ் துணைத் தலைவராக நக்கீரன் பதிப்பகம் நக்கீரன் கோபால், ஆங்கிலத் துணைத் தலைவராக சர்வோதய இலக்கியப் பண்ணை புருஷோத்தமன், இணைச் செயலாளராக பழனியப்பா பிரதர்ஸ் மு. துரைமாணிக்கம், தமிழ் துணை செயலாளராக புலம் லோகநாதன், ஆங்கிலம் துணை செயலாளர் ஆக பார்வேர்ட் மார்க்கெட்டிங் சாதிக் பாஷா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோல் செயற்குழு உறுப்பினர்களாக தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தலா நான்கு பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் நிரந்தர புத்தக கண்காட்சி உறுப்பினர்களாக தமிழ் மற்றும் ஆங்கிலம் பகுதியில் தலா இரண்டு பேர் என தேர்வாகியுள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu